செஞ்சி, மயிலம் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம்
செஞ்சி, மயிலம் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
செஞ்சி,
விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி, மயிலம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பா.ஜ.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் செஞ்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்கு வடக்கு மாவட்ட தலைவர் ஏ.டி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுசெயலாளர்கள் பாண்டியன், எத்திராஜ், செஞ்சி நகர தலைவர் ராமு, செஞ்சி தொகுதி பொறுப்பாளர் ஸ்ரீரங்கன், மயிலம் தொகுதி பொறுப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் மீனாட்சி நித்யசுந்தர் கலந்து கொண்டு வாக்குச் சாவடி முகவர்களுக்கான பணிகளை மேற்கொள்வது குறித்து பயிற்சி அளித்தார். இதில் மாவட்ட துணை தலைவர் முத்துலட்சுமி, அன்பழகன், என்.ஏ.ஏழுமலை, கோகுல் யாதவ், மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி, மண்டல் தலைவர்கள் ராமச்சந்திரன், ஏழுமலை, ஜெயபிரகாஷ், அசோகன், எழிலரசன், ஆளவந்தார், ராமராஜன் மற்றும் மண்டல் பிரபாரிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.