கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி முகாம்


கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி முகாம்
x

ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது

தஞ்சாவூர்

ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் நர்மதா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் 2022-23-ம் ஆண்டிற்கான கிராமப்புற இளைஞர்களுக்கு கால்நடை வளர்ப்பு குறித்த திறன் வளர்க்கும் பயிற்சி முகாம் வருகிற 23-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. பயிற்சியின்போது கால்நடைகளை தேர்வு செய்வது எப்படி?, தீவன மேலாண்மை, கொட்டகை பராமரிப்பு, நோய் மேலாண்மை, தடுப்பூசி மேலாண்மை, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், கால்நடை உற்பத்தி பொருட்களின் விற்பனை வாய்ப்புகள், வங்கிகளில் கடன் பெறும் வழிமுறைகள், திட்ட அறிக்கை தயாரித்தல், கால்நடைகளுக்கான காப்பீடு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் போன்றவை குறித்து விரிவுரைகள் மற்றும் செயல்முறை பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இதில், 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கிராமப்புற இளைஞர்கள் தங்களது ஆதார் எண்ணுடன் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முதலில் பதிவு செய்யும் 28 பேருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பதிவு செய்ய விரும்புபவர்கள் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை விரிவாக்க கல்வித்துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஒரத்தநாடு என்ற முகவரியிலோ அல்லது 04372-234012, 94439 67560, 94436 88842, 99528 45780 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







Next Story