கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்


கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்
x

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

வேலூர்

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 50 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு ராஷ்டிரிய கிராம சுராஜ் அபியான் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.

குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மன்ற கூட்டத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாமை குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் தொடங்கி வைத்து, பயிற்சியில் கலந்துகொண்ட கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி கையேடுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.திருமலை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சி.சாந்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான பயிற்சி நான்கு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத்தில் 14 ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள், உறுதிமொழி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. முதல் கட்ட பயிற்சியில் பயிற்றுநர்களாக நாகராணி, கவிதா, உலகநாதன், கணேசன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.


Next Story