பட்டர் புரூட் பயிர் குறித்த பயிற்சி முகாம்


பட்டர் புரூட் பயிர் குறித்த பயிற்சி முகாம்
x

கூடலூர், பந்தலூர் விவசாயிகளுக்கு பட்டர் புரூட் பயிர் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

நீலகிரி

கூடலூர்,

நபார்டு திட்டத்தின் மூலம் அவகோடா பழம், பட்டர் புரூட் குறித்து அறிவியல் நுண்ணறிவு பயிற்சி கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவகோடா, பட்டர் புரூட் பயிர் செய்யும் விவசாயிகள் கர்நாடகா மாநிலம் குடகில் உள்ள மத்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம் நடந்தது. அப்போது நீலகிரி மாவட்டத்தில் விளையும் அவகோடா பயிரை அறிவியல் பூர்வமாக எப்படி வளர்ப்பது, மண் பரிசோதனை செய்து வளர்க்கும் முறை, சந்தைபடுத்துதல், அறிவியல் பூர்வமாக பயிரிடுதல் மற்றும் ஒட்டுரக செடிமுறை உள்பட அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டது.


Next Story