பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி முகாம்


பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 14 July 2023 12:15 AM IST (Updated: 14 July 2023 4:50 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசினர் கலைக்கல்லூரியில் பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருவாரூர்

மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசினர் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தமிழ்நாடு தீயணைப்புத்துறை மீட்பு பணிகள் நிலையம் இணைந்து முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி கல்லூரி திருவள்ளுவர் அரங்கில் பேரிடர் காலங்களில் மக்களை எவ்வாறு காப்பாற்றுவது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். விபத்தில் சிக்கியவர்கள், தீ விபத்தில் சிக்கியவர்கள், நீர்நிலைகளில் மூழ்கியவர்களை காப்பாற்றுதல் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சிகளை கல்லூரி மாணவர்களுக்கு தீயனைப்புத்துறை நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையிலான குழுவினர் அளித்தனர். முன்னதாக கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் வரவேற்றார். இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். முடிவில் வேதியியல் துறை பேராசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.


Next Story