சுகாதாரமான கருவாடு தயாரிப்பது குறித்த பயிற்சி முகாம்


சுகாதாரமான கருவாடு தயாரிப்பது குறித்த பயிற்சி முகாம்
x

சுகாதாரமான கருவாடு தயாரிப்பது குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை அருகே உள்ள சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சுகாதாரமான முறையில் கருவாடு தயாரிப்பது குறித்த பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலக்கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் தாரிக் சையது முன்னிலை வகித்தார். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ் கலந்துகொண்டு பேசினார். இதில் சுகாதாரமான முறையில் கருவாடு, மாசாலா கருவாடு, மீன் மற்றும் இறாலில் ஊறுகாய் தயாரித்தல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் குறித்த செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. விவசாயிகளை குழுக்களாக பிரித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


Next Story