இணையவழி வரி வசூல் குறித்து பயிற்சி முகாம்


இணையவழி வரி வசூல் குறித்து பயிற்சி முகாம்
x

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு இணையவழி வரி வசூல் குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.

வேலூர்

குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு இணைய வழி வரி வசூல் செய்வது தொடர்பான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.திருமலை தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி வரவேற்றார்.

குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் மோகன், அகிலாண்டேஸ்வரி, சாந்தி, ரமேஷ்குமார், கேசவேலு, முனுசாமி, குமரன், ஜெய்சங்கர், பரந்தாமன், கனகரத்தினம், துளசிராமுடு, கவுசல்யா உமாகாந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பட விளக்க காட்சிகள் மூலம் இணைய வழியில் வரி வசூல் செய்வது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் ஊராட்சி மன்ற தலைவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.


Next Story