காட்டு விலங்குகளை தடுப்பது குறித்து பயிற்சி முகாம்


காட்டு விலங்குகளை தடுப்பது குறித்து பயிற்சி முகாம்
x

காட்டு விலங்குகளை தடுப்பது குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அருகே வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விளை நிலங்களில் காட்டு விலங்குகள் நடமாட்டத்தை தடுப்பது குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதா வரவேற்றார். ஜோலார்பேட்டை ஒன்றியக் குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.கவிதா தண்டபாணி, தேசிய பாதுகாப்பு உணவு இயக்க ஆலோசகர் வாசுதேவ ரெட்டி, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

பயிற்சி முகாமில் பொன்னேரி சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியின் போது அட்மா திட்ட அலுவலர் மேரிவீனஸ், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், மத்திய ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம், ஒன்றிய கவுன்சிலர் சிவபிரகாசம், ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி அருள், துணைத் தலைவர் எஸ். அரவிந்தன், ஊராட்சி செயலாளர் சின்னத்தம்பி உள்ளிட்ட வேளாண் அலுவலர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.


Next Story