ஊர்க்காவல்படை வீரர்களின் பயிற்சி நிறைவு விழா


ஊர்க்காவல்படை வீரர்களின் பயிற்சி நிறைவு விழா
x

நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல்படை வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல்படை வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நடந்தது.

ஊர்க்காவல்படை

நெல்லை மாநகரில் காவல்துறையினருக்கு உதவியாக பணியாற்றும் வகையில் புதிதாக ஊர்க்காவல் படையினர் 7 பெண்கள் உள்பட 49 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கடந்த 19-10-2022 முதல் நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வைத்து கவாத்து பயிற்சி மற்றும் பாதுகாப்பு பணிகள் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அவர்கள் அனைவரும் தங்கள் பயிற்சியை நிறைவு செய்தனர்.

அணிவகுப்பு மரியாதை

நேற்று ஊர்க்காவல் படை வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் தலைமை தாங்கினார். துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் (கிழக்கு), சரவணகுமார் (மேற்கு), அனிதா (தலைமையிடம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஊர்க்காவல் படைவீரர்களின் அணிவகுப்பு மரியாதையை போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் ஏற்றுக்கொண்டார். மேலும் பயிற்சி முடித்து களப்பணிக்கு செல்லும் வீரர்களுக்கு பொதுமக்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

பாராட்டு

தொடர்ந்து பயிற்சியில் சிறந்து விளங்கியவர்களுக்கும், கவாத்து போதகர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாநகர குற்ற ஆவணக்காப்பக உதவி போலீஸ் கமிஷனர் சரவணன், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் டேனியல் கிருபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story