தரவு உள்ளீட்டாளர்களுக்கான பயிற்சி வகுப்பு


தரவு உள்ளீட்டாளர்களுக்கான பயிற்சி வகுப்பு
x

ஆலங்காயத்தில் இ-சேவை மையங்களின் தரவு உள்ளீட்டாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.

திருப்பத்தூர்

ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கத்தில் இ-சேவை மையங்களின் தரவு உள்ளீட்டாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதனை கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் தேசிய ஓய்வூதிய திட்டம், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், பி.எம்-திஷா, அஞ்சல் துறை சார்ந்த சேவைகள், டெலிலா, டெலி மெடிசன், பான் கார்டு, பாஸ்போர்ட், காப்பீடு திட்டம், பிரதம மந்திரியின் விரிவான பயிர் காப்பீட்டு திட்டம், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வாரிசு சான்றிதழ், ஏபிசி உள்ளிட்ட 24 வகையான சான்றிதழ்கள் வழங்குவது பற்றி பயிற்சி அளிக்கப்படும். நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அரசினுடைய அனைத்து திட்டங்களும் பொது மக்களை சென்றடைகின்ற வகையில் நீங்கள் பணியாற்றிட வேண்டும். அப்போது தான் பொது மக்களுக்கும் நீங்களும் பயனடைய முடியும். இந்த பயிற்சியினை நல்லமுறையில் பயன்படுத்திகொண்டு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இங்கேயே நன்கு தெளிவாக கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பயிற்சி வகுப்பில் மின் மாவட்ட மேலாளர் ஜெகநாதன், மின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ்குமார், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) உமா, ஆலங்காயம் ஒன்றியக்குழு தலைவர் சங்கீதா பாரி, துணைத் தலைவர் பூபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், திருநாவுக்கரசு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story