காரீப் பருவ சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
மேற்கு ஆரணி வட்டாரத்தில் காரீப் பருவ சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.
ஆரணி,
மேற்கு ஆரணி வட்டாரத்தில் காரீப் பருவ சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.
மேற்கு ஆரணி வட்டாரத்தில் முள்ளிப்பட்டு மற்றும் புதுப்பாளையம் கிராமங்களில் வேளாண்மை துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் காரீப் பருவத்தில் பயிர் சாகுபடி குறித்து பயிற்சி வகுப்பு நடந்தது.
நிகழ்ச்சிக்கு வேளாண்மை துணை இயக்குனர் தா. செல்லத்துரை தலைமை தாங்கினார். வேளாண்மை அலுவலர் கீதா, துணை வேளாண்மை அலுவலர் சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டு காரீப் பருவத்தில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பங்கள் குறித்தும் விதைப்பு மற்றும் நடவு மண் மாதிரி பற்றியும் விளக்கி பேசினர்.
இதில் வட்டார தொழில்நுட்பக் குழு தலைவர் பாலமுருகன், உதவி தோட்டக்கலை அலுவலர் பூவழகி, உதவி வேளாண்மை அலுவலர் ராஜாபாபு, முள்ளிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா வெங்கடேசன், ஊராட்சி செயலர் தேவராஜ் உள்பட அலவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.=========