குன்னூரில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு


குன்னூரில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு

நீலகிரி

குன்னூர்

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் வேளாண்மை மற்றும் வேளாண் தொழிற்சாலைகளுக்கான ஆற்றல் திட்டத்தின் ஒரு பகுதியான ஆதிதிராவிடர் உள்ளீட்டு திட்டத்தின் கீழ் புதுபிக்கவல்ல ஆற்றல் சாதனங்கள் பயிற்சி மற்றும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி குன்னூர் அருகே தூதூர்மட்டம் கிராமத்தில் நடைபெற்றது. தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பாக மணிவாசகம் கலந்து கொண்டு புதுப்பிக்கவல்ல ஆற்றல் குறித்த பயிற்சியும் வேளாண் அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கி கூறினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் புதுப்பிக்கவல்ல ஆற்றல் தொழிற்சாலையின் பேராசிரியர் ஆர்.மகேந்திரன் இந்த திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இறுதியில் இணை பேராசிரியர் சந்திரகுமார் நன்றி கூறினார். தோட்டக்கலை துறையின் திட்டங்கள் குறித்து துணை தோட்டக்கலை அலுவலர் சந்திரன் விளக்கம் அளித்து துறை சார்பாக கலந்துகொண்ட விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை இடுப்பொருட்களை வழங்கினார்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண்மை உதவியாளர் ராஜா, செல்வராஜ் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் சரவணன் மற்றும் தூதூர்மட்டம் உழவர் உற்பத்தியாளர் குழுவின் தலைவர்கள் பால்பாண்டி மற்றும் பிரபாகரன் ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.


Next Story