சூரிய சக்தியின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


சூரிய சக்தியின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

தோட்டக்கலைத்துறை சார்பில் சூரிய சக்தியின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் வேளாண்மையில் சூரிய சக்தியின் பயன்பாடு குறித்த பயிற்சி முகாம் மசக்கல் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு தோட்டக்கலை உதவி இயக்குநர் ஐஸ்வர்யா தலைமை தாங்கி, தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். தோட்டக்கலை அலுவலர் தயானந்தன் வேளாண்மையில் சூரிய ஒளி மின்சக்தியின் பயன்பாடு குறித்தும், வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய திட்டங்களான சோலார் மின்வேலி அமைத்தல், சோலார் பம்ப் செட், சோலார் உலர்த்தி போன்றவற்றின் பயன்பாடுகள் குறித்து செயல்விளக்கம் அளித்தார். விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னதாக அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரவீனா வரவேற்றார். பயிற்சியில் 50 விவசாயிகள் கலந்துகொண்டனர். முடிவில் மணிமேகலா நன்றி கூறினார்.


Next Story