வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி


வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி
x

நீடாமங்கலம் அருகே வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் அருகே உள்ள காளாஞ்சிமேடு கிராமத்தில் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இறுதி ஆண்டு கல்லூரி மாணவிகள் களப்பயிற்சியில் ஈடுபட்டனர். காளாஞ்சிமேடு கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி துணைத்தலைவர் கருணாகரன் ஒருங்கிணைத்து நடத்தினாா். முகாமில் மாணவிகள் கால்நடைகளுக்கான தீவனப்புல் மற்றும் பயிர் வகைகளுக்கான சிறப்பு கண்காட்சியை நடத்தினர். இதில் கம்பு நேப்பியர், ஒட்டுப்புல், தீவனச்சோளம், தீவனமக்காச்சோளம், எருமைப்புல், கினியாபுல், வேலி மசால், முயல் மசால், கொழுக்கட்டைப்புல் போன்ற தீவனங்கள் இடம் பெற்றன. கண்காட்சியில் உதவிபேராசிரியர் கீதாஞ்சலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story