கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி
கல்வெட்டுகளை பாதுகாப்பது குறித்து கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்
பழனி அரசு அருங்காட்சியகம், பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி ஆகியவை சார்பில் மாணவிகளுக்கு 'அருங்காட்சியகத்தை பாதுகாக்கும் கலை' என்ற தலைப்பில் 7 நாட்கள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. பழனி அரசு அருங்காட்சியக வளாகத்தில் தொடங்கிய முகாமுக்கு, அருங்காட்சியக காப்பாட்சியர் குணசேகரன் தலைமை தாங்கினார்.
கல்வெட்டுகளை படி எடுத்தல், கற்சிலைகள், ஓலைச்சுவடிகளை பாதுகாத்தல், நடுகற்களை கண்டறிந்து வகைப்படுத்துதல் குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நேற்று தொடங்கிய பயிற்சி முகாம், வருகிற 17-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர் ஜெயந்திமாலா, உதவிப்பேராசிரியை குமுதவள்ளி ஆகியோர் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story