சின்னமனூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி
சின்னமனூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சின்னமனூர் அருகே கரிச்சிபட்டியில் உள்ள கவின் வாழைநார் தொழிற்சாலையில், தேனி கம்மவார் சங்க கலை கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வாழைநாரின் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வது குறித்த கள ஆய்வு மற்றும் பயிற்சி முகாம் 3 நாட்கள் நடைபெற்றது.
இந்த முகாமில் தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் ஜமீன்பிரபு கலந்துகொண்டு, வாழைநாரில் இருந்து எவ்வாறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யலாம் என்பது குறித்து நேரடி தொழிற்சாலை கள ஆய்வு மூலம் விளக்கி கூறினார். இதில், 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இதில், கல்லூரி வணிகவியல் துறை தலைவர்கள் மைதிலி, உமாமகேஸ்வரி மற்றும் பேராசிரியர்கள் வாணிப்பிரியா, பாண்டீஸ்வரி, மோனிஷா, பிரபுகுமார், ராஜகுமாரி, ஆனந்தி ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.