குடிநீர் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கு பயிற்சி
பழனி பகுதியில் உள்ள ஊராட்சி குடிநீர் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம், பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
திண்டுக்கல்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பழனி பகுதியில் உள்ள ஊராட்சி குடிநீர் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம், பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமிற்கு வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் சசிகலா முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், லலீனா ஆகியோர் பயிற்சியை தொடங்கி வைத்தனர். பின்னர் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள், தண்ணீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, சுகாதாரமான குடிநீர், நீரில் உள்ள பாக்டீரியாக்களை கண்டறியும் முறை குறித்து விளக்கம் அளித்தனர். இந்த பயிற்சியில் பழனி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி குடிநீர் சுகாதார உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story