விவசாயிகளுக்கு பயிற்சி
விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
விருதுநகர்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியம் கொம்மிங்காபுரம் கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் சத்துமிகு சிறுதானிய இயக்கம் சார்பில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குனர் முத்தையா தலைமை தாங்கினார். உதவி வேளாண்மை அலுவலர்கள் முருகராஜ், ராமசாமி, முன்னிலை வகித்தனர்.
சத்துமிகு சிறுதானியம் நடவு பற்றியும், பயிர் சாகுபடி பற்றியும், வேப்பம் புண்ணாக்கு பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது. சிறுதானியம் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.1,150 இடுபொருள் மானியம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு உதவி தொழில்நுட்ப மேலாளர் விக்னேஸ்வரி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story