விவசாயிகளுக்கு பயிற்சி


விவசாயிகளுக்கு பயிற்சி
x

விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் உள்ள அரசு பொதுத்துறை சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் எறையூர், புதுவேட்டக்குடி மற்றும் கோவில்பாளையம் ஆகிய கிராமங்களில் கரும்பு சாகுபடியில் பூஞ்சான நோய், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்த செயல்விளக்க பயிற்சி முகாம், சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகி ரமேஷ் மேற்பார்வையில் நடந்தது. முகாமை கரும்பு அபிவிருத்தி அலுவலர் ஆனந்தன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் அரவைத்திறன், கரும்பு பதிவு, கடைபிடிக்க வேண்டிய கரும்பு அபிவிருத்தி பணிகள் குறித்தும், 2021-22 அரவை பருவத்திற்கு விவசாயிகள் சப்ளை செய்த கரும்பிற்கான நிலுவை தொகை அனைத்தும் தமிழக அரசால் வழங்கப்பட்ட வழிவகை கடன் மூலம் முழுவதுமாக வழங்கப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்தார்.

முகாமில் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தின் நிபுணர்கள் ஜெயச்சந்திரன், தங்கேஸ்வரி ஆகியோர் பூஞ்சான நோய், மஞ்சள் இலை நோய் என்ற வைரஸ் நோய் ஆகிய நோய்களும், மாவுப்பூச்சி என்ற பூச்சி பாதிப்பிற்கான காரணங்கள், அதன் அறிகுறிகள், பரவும் விதம், பூச்சி பரவாமல் கட்டுப்படுத்துவதற்கான செயல்முறைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர். முடிவில் புதுவேட்டக்குடி கோட்ட கரும்பு அலுவலர் சுரேஷ் நன்றி கூறினார்.


Next Story