விவசாயிகளுக்கு பயிற்சி


விவசாயிகளுக்கு பயிற்சி
x

விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.

கரூர்

கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பால்ராஜபுரம் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக பருத்தி விவசாயிகளுக்கு பயிர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. இதனை வேளாண்மை உதவி இயக்குனர் தங்கவேல் தொடங்கி வைத்தார். விவசாயிகளுக்கு பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மற்றும் பண்ணைப் பள்ளியின் முக்கியத்துவம், பருத்தியில் விதை நேர்த்தி செய்து செயல் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. புழுதிதேரி வேளாண் அறிவியல் மையம் மாரிக்கண்ணு, உதவி வேளாண்மை அலுவலர் பொன்ராஜ் ஆகியோர் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். இதில் விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story