விவசாயிகளுக்கு பயிா் மேலாண்மை பயிற்சி
வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிா் மேலாண்மை பயிற்சி நடந்தது.
தஞ்சாவூர்
திருவையாறு;
திருவையாறு வட்டாரம் வேளாண்மை துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் வேளாண்மை அறிவியல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனா். அங்கு விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு மேலாண்மை என்ற தலைப்பில் நடந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் விவசாயிகளுக்கு பயிர் வகை பயிர்களின் ரகங்கள் நோய் மற்றும் பூச்சி தாக்குதல்கள் பற்றி வேளாண்மை வல்லுனர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர் பயிற்சியில் சிறுதானியங்களை பற்றியும் அதன் நன்மைகள் மற்றும் பயிரிடும் முறைகள் பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சி ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயபிரபா மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சாந்தகுமாரி, நித்யா ஆகியோர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story