இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி
இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி
திருவாரூர்
குடவாசல் அருகே மஞ்சக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான மனுக்கள் பெற இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு குடவாசல் தாசில்தார் தலைமை தாங்கினார். துணை தாசில்தார் சரவணகுமார் முன்னிலை வகித்தார். 113 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு இத்திட்டம் தொடர்பான விண்ணப்பங்களை பெறுவதற்கும், விண்ணப்பங்களை மென்பொருளில் பதிவேற்றம் செய்வது குறித்தும் ஒருங்கிணைப்பாளர் சுதாகர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பயிற்சி நடத்தினர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story