இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி


இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி
x

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை விடுமுறையில் அறிவியல் திருவிழா நடைபெற உள்ளது. இதில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் மூலம் மாணவர்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகள், கணித புதிர்கள், மந்திரமா தந்திரமா, அறிவியல் பாடல்கள், காகித மடிப்பு கலை உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு ஒவ்வொரு கிராமத்திலும் 5 மணி நேரம் அறிவியல் திருவிழா நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 400 இடங்களில் இந்நிகழ்வு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி மாவட்டத்தில் 13 வட்டார வளமையத்திலும், தலா 30 தேர்ந்தெடுக்கப்பட்ட இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் 390 பேருக்கு பயிற்சிகள் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. இந்த திருவிழா மே மாதம் 2-ந் தேதி முதல் 20 நாட்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒவ்வொரு ஊராட்சி பகுதியிலும் நடத்தப்படும் என்று அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தொிவித்துள்ளார்.


Next Story