இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி
இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் 160 தொடக்கநிலை இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நகர்மன்ற ஊரணிபட்டி நடுநிலைப்பள்ளி மற்றும் லட்சுமியாபுரம்புதூர் ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்றது. பயிற்சிக்கு இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமை தாங்கினார். ஆசிரியப் பயிற்றுனர் செல்வம் முன்னிலை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை பயிற்சியை தொடங்கி வைத்தும், புதிய தன்னார்வலர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியும் பேசினார். பயிற்சியின் கருத்தாளர்களாக பட்டதாரி ஆசிரியர் ராமர், அய்யனார், தலைமை ஆசிரியை கிறிஸ்டி தங்கநாயகம், ஜஸ்டின் தங்கராஜ், அனிதா ஆகியோர் செயல்பட்டனர். பயிற்சியில் 160 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story