துப்பாக்கி சுடும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி


துப்பாக்கி சுடும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி
x

துப்பாக்கி சுடும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

திருச்சி

பயிற்சியாளர்களுக்கான பயிற்சி

திருச்சி ரைபிள் கிளப்பில் இந்திய ரைபிள் சங்கத்தின்-தெற்கு மண்டலம் சார்பாக ரைபிள் மற்றும் பிஸ்டலுக்கான துப்பாக்கி சுடும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கி வருகிற 27-ந் தேதி வரை நடக்கிறது. இதன் தொடக்க விழா ரைபிள் கிளப்பில் நேற்று நடைபெற்றது. கிளப் செயலாளர் செந்தூர்செல்வன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் மூத்த துணைத்தலைவரும், தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கத்தின் தலைவருமான சீதாராமராவ், இந்திய ரைபிள் சங்க இணை செயலாளர் பவன்சிங், பயிற்சியாளர்களுக்கான கல்வித்திட்ட மேலாளர் அனந்த்முரளி, தகவல் தொடர்பின் பயிற்றுனர் இந்திராஜித்சென் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டுக்கு பெருமை

சிறப்பு விருந்தினராக திருச்சி ரைபிள் கிளப் தலைவரும், மாநகர போலீஸ் கமிஷனருமான சத்தியப்பிரியா கலந்து கொண்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், 'எந்தவொரு போட்டியிலும் சிறந்த வீரர், வீராங்கனைகளை உருவாக்குவதில் பயிற்சியாளரின் பங்கு முக்கியமானது. ஆகவே சிறந்த வீரர், வீராங்கனைகளை உருவாக்கி, இந்தியாவுக்கு துப்பாக்கி சுடும் பிரிவுகளில் பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்' என்றார்.

இந்த பயிற்சி வகுப்பில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 30 பேர் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பில் பயின்று, தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்தக்கட்ட பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள் என போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.


Next Story