தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி


தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி
x

தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி

சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. தொடக்க விழாவில் பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் சோலைசாமி, கல்லூரி இயக்குனர் விக்னேஷ்வரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிச்சாமி, லெப்டினட் கர்னல் பிரதோஷ் உள்ளிட்ட தேசிய மாணவர் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாமில் பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காமராஜ் கலை மற்றும் அறிவியில் கல்லூரி, திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் ஆதித்தனார் கலை-அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த 120 மாணவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 பள்ளிகளை சேர்ந்த 320 மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். இவர்களுக்கு அடிப்படை உடற்பயிற்சி, ஆயுதங்கள் கையாளுதல், வரைபடங்கள் கையாளுதல், துப்பாக்கி சுடுதல் ஆகிய பயிற்சிகளை லெப்டினட் கர்னல் பிரதோஷ் அளித்தார். 10 நாள் நடைபெறும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பி.எஸ்.ஆர். கல்லூரி நிர்வாகம் சார்பில் தங்கும் இடம் மற்றும் உணவு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமிற்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அதிகாரி மாதவன் செய்திருந்தார்.


Next Story