ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி
ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
திருப்பத்தூர்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 34 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பொறியியல் மற்றும் கண்காணிப்பு குறித்து 2 நாள் பயிற்சி நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், மணவாளன் ஆகியோர் தலைமை வகித்தனர். பணி மேற்பார்வையாளர்கள் கோடீஸ்வரன், தொட்டாலம்மாள், முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு ஊராட்சி செயல்பாடு திட்டங்கள் குறித்து எவ்வாறு முறையாக அனுமதி பெற வேண்டும், செலவினங்களுக்கு எவ்வாறு செய்ய வேண்டும், பணிகள் நடைபெறும் போது அதிகப்படியான செலவினங்கள் எவ்வாறு ஒப்புதல் பெற வேண்டும், அடிப்படை பொறியியல் மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளித்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் உள்பட பலர் பயிற்சி குறித்து பேசினர்.
Related Tags :
Next Story