மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோருக்கு பயிற்சி
வேதாரண்யத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கான நோக்குநிலை பயிற்சி வகுப்பு நடந்தது. வேதாரண்யம் வட்டார வளமையத்தில் நடந்த ஒன்றிய அளவிலான பயிற்சி வகுப்புக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர்அசோக்குமார் தலைமை தாங்கினார்.வேதாரண்யம் வட்டாரக் கல்வி அலுவலர் ராமலிங்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட வட்டார மேற்பார்வையாளர் சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியில் மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகள், ஆரம்ப நிலையில் குழந்தைகளுக்கு ஏற்படும் இடர்பாடுகள் கண்டறிதல் குறித்து பெற்றோர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பெற்றோர்களுக்கான நோக்குநிலை குறித்து வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், கலையரங்கத் திட்ட பயிற்றுனர் அம்பிகாபதி, சிறப்பு கல்வி பயிற்றுனர்கள் மற்றும் பிசியோதெரபி இயக்குனர் ஆகியோர் பயிற்சியளித்தனர். இதில் ஆசிரியர் பயிற்றுனர்கள், இல்லம் தேடிக் கல்வி வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர், அங்கன்வாடி பணியாளர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக சிறப்பு கல்வி பயிற்றுனர் அருணகிரிநாதர் வரவேற்றார். முடிவில் பயிற்றுனர் சாந்தி நன்றி கூறினார்.