வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி


வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி
x

கீழ்வேளூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி நடந்தது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி கீழ்வேளூர் தனியார் கல்லூரியில் நடந்தது. இதில் இணையதளம் மூலம் வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் குறித்து பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் தாசில்தார் பிரான்சிஸ், கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் துர்காபாய் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story