மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்களுக்கு பயிற்சி
மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்களுக்கு பயிற்சி நடந்தது.
கரூர்
கரூர்
கரூர் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களின் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் இயன்முறை பயிற்சியாளர்களுக்கான 5 நாள் சைகைமொழி பயிற்சி கரூர் நகர்மன்ற கோட்டைமேடு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த பயிற்சியினை மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகவடிவு தொடங்கி வைத்து பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் பயிற்சியினை பார்வையிட்டார். மாவட்ட உதவித்திட்ட அலுவலர் சக்திவேல் பயிற்சி விவரங்களை கேட்டறிந்து, ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார். இப்பயிற்சியில் 32 சிறப்பு பயிற்றுனர்கள், 5 இயன்முறை பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதா செய்திருந்தார்.
Related Tags :
Next Story