நான் முதல்வன் திட்டம் குறித்து மாணவா்களுக்கு பயிற்சி


நான் முதல்வன் திட்டம் குறித்து மாணவா்களுக்கு பயிற்சி
x

நான் முதல்வன் திட்டம் குறித்து மாணவா்களுக்கு பயிற்சி நடந்தது.

கரூர்

குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் சார்பில் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) இயற்பியல் துறைத்தலைவர் பேராசிரியர் ராமநாதன் தலைமை தாங்கினாா். இதில் வங்கி சார்பணிகள் குறித்த பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாணவர்களுக்கான பயிற்சி குழுவிற்கு கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை தலைவர் பேராசிரியர் சரவணன் தலைமையிலான குழுவினர் தேசிய பங்குச் சந்தை முகமை பயிற்சி பெற்ற பயிற்றுனர்கள் அகிலா, மேனகா, மோகனா ஆகியோர் மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கினார்கள்.

இதில் கல்லூரியின் அனைத்துத்துறை ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனா். முன்னதாக நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் ஹில்டா தேன்மொழி வரவேற்றார். முடிவில் ஆங்கில துறை பேராசிரியர் சந்துரு நன்றி கூறினார்.


Next Story