உலர் பழங்கள்- மிட்டாய் தயாரிப்பது குறித்து பயிற்சி
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலர் பழங்கள்- மிட்டாய் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வணிக பயன்பாட்டுக்கான உலர் பழங்கள் மற்றும் மிட்டாய்களை தயாரிப்பது தொடர்பான தொழில்நுட்பங்கள் பற்றி சிறப்பு செயல் முறை பயிற்சி முகாம் நடந்தது. இதில் உணவியல் பேராசிரியர் கமலசுந்தரி கலந்து கொண்டு செயல்முறை விளக்கம் அளித்தார். உலர் பழங்கள் மற்றும் மிட்டாய் தயாரிப்பில் உள்ள வணிக வாய்ப்புகள் பற்றி தஞ்சை வேளாண்மை கல்லூரி பேராசிரியர் ஜெகன்மோகன் விளக்கம் அளித்தார். தொழில் கடன் உதவி பற்றி எழிலரசன் பேசினார். பயிற்சியில் 24 விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாம்பழம், ஆப்பிள், பேரிக்காய், நெல்லிக்காய், அத்திப்பழம், பலாப்பழம், திராட்சை, வாழைப்பழம், தர்பூசணி தோல், முந்திரி பழம், சப்போட்டா, கொய்யா போன்ற பழங்களில் இருந்து உலர் பழங்கள் தயாரிக்கும் முறை பயிற்சியின்போது விளக்கம் அளிக்கப்பட்டது.