ஆசிரியர்களுக்கு பயிற்சி


ஆசிரியர்களுக்கு பயிற்சி
x

ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில், 6-ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கக்கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாதாந்திர குறுவள மைய அளவிலான கலந்தாலோசனை கூட்டம், ஜெயங்கொண்டம் ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பாட வாரியாக நடைபெற்றது. பயிற்சியினை வட்டார வள மைய மேற்பார்வையாளர்(பொறுப்பு) கண்ணதாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி ஆகியோர் பயிற்சியை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு கருத்துகளை வழங்கினர். 286 பட்டதாரி ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுனர்களும் கலந்து கொண்டனர். அடுத்த மாதத்திற்கான பாடத்திட்டம் குறித்த கலந்தாலோசனை பாடவாரியாக நடத்தப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜ்குமார், வட்டார பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அந்தோணி லூர்து சேவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story