அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
x

திருவாரூரில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடந்தது.

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூரில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது. 10-ம் வகுப்பு பொது தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இந்த தேர்வில் திருவாரூர் மாவட்டத்தில் மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி பெற செய்ய இந்த பயிற்சி வகுப்பு நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மாதவன் பயிற்சியை தொடங்கி வைத்தார். 100 சதவீதம் தேர்ச்சியை இலக்காக கொண்டு மாணவர்களை எவ்வாறு தேர்வுக்கு தயார் செய்வது?, தேர்வு குறித்த பயத்தை எப்படி போக்குவது? என்பது குறித்து நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தமிழ்செல்வன் மற்றும் ஆசிரியர்கள் சிவகுரு, வெங்கடாஜலபதி, கணேசன், ஆகியோர் பேசினர். இதில் திருவாரூர், கொரடாச்சேரி, வலங்கைமான், குடவாசல், நன்னிலம் ஆகிய பகுதியில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story