பசுமை ஆலய திட்டத்தில் சிக்கல் சிங்காரவேலர் கோவில் பணியாளர்களுக்கு செயல்முறை பயிற்சி


பசுமை ஆலய திட்டத்தில்  சிக்கல் சிங்காரவேலர் கோவில் பணியாளர்களுக்கு செயல்முறை பயிற்சி
x

சிக்கல் சிங்காரவேலர் கோவில் பணியாளர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் பசுமை ஆலய திட்டத்தின் கீழ் கோவிலில் பயன்படுத்தப்படும் பூக்களை உரமாக்குவது குறித்த பயிற்சி நடந்தது. இதில் கோவில் பணியாளர்களுக்கு செயல் முறை விளக்கம் மற்றும் பசுமை ஆலய திட்டத்தின் நோக்கம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், கிராம நல சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருட்செல்வன், அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story