தன்னார்வலர்களுக்கான பயிற்சி
தன்னார்வலர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் தலைமை தாங்கி பேசினார். இப்பயிற்சியில், இத்திட்டத்தின் நோக்கம் 15 வயதிற்கு மேல் எழுத, படிக்கத் தெரியாதவர்களுக்கு எழுதப்படிக்க பயிற்சி அளிப்பதோடு வாழ்வியல் திறன் பயிற்சிகளும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்டிமடம் ஒன்றியத்தில் எழுதப்படிக்க தெரியாதவர்கள் கணக்கெடுப்பு பணி பள்ளி அளவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆண்டிமடம் ஒன்றியத்தில் 67 புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மையங்கள் செயல்பட உள்ளன. இத்திட்டத்தின் நோக்கம் அனைவரும் 100 சதவீதம் எழுத்தறிவு அடைவது ஆகும். 2022-2027-ம் ஆண்டு வரை உள்ள ஐந்தாண்டுகாலத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். பயிற்சி 6 மாதங்களுக்கு நடைபெறும். பின்னர் தேர்வு மூலம் அவர்கள் திறமை சோதிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். ஒரு தன்னார்வர்களுக்கு குறைந்தது 10 முதல் 30 கற்றோர் வரை இருப்பார்கள். தன்னார்வலர்களுக்கு எந்த வித ஊதியமோ ஊக்கத்தொகையோ வழங்கப்படமாட்டாது. தன்னார்வலர்கள் விருப்பத்தின் பெயரிலேயே மையங்களை நடத்திட வேண்டும். இதற்கான மையங்கள் டிசம்பர் மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளது. மையம் செயல்படும் இடங்களை தன்னார்வலர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். பள்ளிகள், பொது இடங்கள் 100 நாள் வேலை செய்யும் இடங்களில் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதில் தன்னார்வலர்களுக்கு ஆசிரியர் பயிற்றுனர்கள் கார்த்திகேயன், ஆசைத்தம்பி ஆகியோர் பயிற்சி அளித்தனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் ரமேஷ் நன்றி கூறினார்.