பெண்களுக்கு சோப்பு உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி
பெண்களுக்கு சோப்பு உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி நடந்தது.
கரூர்
கரூர் மாவட்ட அனைவருக்கும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் வேட்டமங்கலம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பெண்களுக்கு தேங்காயில் இருந்து சோப்பு, சாம்பிரணி, கயிறு, தேங்காய் நார் மூலம் கால்மிதி மற்றும் பல்வேறு பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி முகாம் நொய்யல் அம்மா பூங்காவில் நடைபெறுகிறது. அங்கு பொருட்கள் தயாரிப்பது குறித்து பெண்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுத்து கற்றுத்தரப்படுகிறது. பயிற்சி முடிவில் ரூ.1000 மதிப்புள்ள கிப்ட் இலவசமாக வழங்கப்படுகிறது. பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி 10 நாட்கள் நடைபெறுகிறது. பயிற்சி முடிவில் தமிழக அரசு சார்பில் சான்றிதழ் மற்றும் தொழில் தொடங்க மானியத்துடன் வங்கி கடன் வழங்கப்படுகிறது.
Related Tags :
Next Story