பணித்தள பொறுப்பாளர்களுக்கு பயிற்சி


பணித்தள பொறுப்பாளர்களுக்கு பயிற்சி
x

ஊராட்சிகளில் பணிபுரியும் பணித்தள பொறுப்பாளர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் பணிபுரியும் பணித்தள பொறுப்பாளர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொறியாளர் சுகுமார் வரவேற்றார். இதில் ஊராட்சியில் உள்ள பணித்தள பொறுப்பாளர்களுக்கு என்னென்ன பணிகளை செய்ய வேண்டுமென்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் பேசினர். முகாமில் ஒன்றிய பொறியாளர் கோவிந்தராஜ், பணி மேற்பார்வையாளர் விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

---


Next Story