தென்னை வளர்ப்பு பயிற்சி
பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் தென்னை வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி தேசிய வங்கி இணைந்து தென்னை வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராஜாங்கம் முன்னிலை வகித்தார்.இந்த பயிற்சி முகாமில் மாநில தென்னை வளர்ச்சி வாரிய இயக்குனர் அரவாளி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், தென்னை பல்லாண்டு பயிர்களில் முக்கியமானதாகும். அனைத்து பாகங்களும் பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. தேனி மாவட்டத்தில் 21 ஆயிரத்து 207 ஹெக்டரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது என்றார். இந்த பயிற்சி முகாமில் வேளாண்மை இணை இயக்குனர் சங்கர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.