கறவை மாடு வளர்ப்பு பயிற்சி


கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
x

கால்நடை மருத்துவக்கல்லூரியில் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி நடந்தது

திருநெல்வேலி

நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நெல்லை வாழ்ந்து காட்டுவோம் திட்டம் இணைந்து விஞ்ஞான முறையில் கறவை மாடு வளர்ப்பு பற்றிய பயிற்சியாளர்களுக்கான பயிற்சி நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரியில் நடந்தது. இதில் கறவை மாடு வளர்ப்பு மற்றும் மேலாண்மை முறைகளை பற்றி 11 பயிற்சி வகுப்புகளுடன் கூடிய செயல்முறை விளக்க பாடங்கள் மற்றும் அபிஷேகப்பட்டி மாவட்ட கால்நடை பண்ணை பார்வையிடல் ஆகியவை கல்லூரி பேராசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டது. பயிற்சியின் நிறைவு விழா நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் எட்வின் தலைமையில் நடந்தது. பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பயிற்சி கையேடு வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ராம்லால், சுந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பயிற்சி இணை ஒருங்கிணைப்பாளர் குணசீலன் நன்றி கூறினார். இந்த பயிற்சியில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 30 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


Next Story