காய்கறி சாகுபடி பயிற்சி


காய்கறி சாகுபடி பயிற்சி
x

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் காய்கறி சாகுபடி பயிற்சி

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் வை.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு வருகிற 20, 21, 22-ந் தேதிகளில் 3 நாட்களுக்கு பாதுகாக்கப்பட்ட சூழலில் காய்கறி சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி இலவசமாக நடத்தப்படுகிறது. எனவே இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிலையத்தை தொடர்பு கொண்டு தங்கள் பெயரை முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story