குமரி மாவட்ட பேரூராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கான பயிற்சி கூட்டம்;கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது


குமரி மாவட்ட பேரூராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கான பயிற்சி கூட்டம்;கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது
x

குமரி மாவட்ட பேரூராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான பயிற்சி கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நாகர்கோவிலில் நடந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்ட பேரூராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான பயிற்சி கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நாகர்கோவிலில் நடந்தது.

பயிற்சி கூட்டம்

குமரி மாவட்ட பேரூராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான பயிற்சி கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது. கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் நிர்வாக அமைப்பு, நகர்மன்றம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகார கடமைகள் அவற்றின் பொறுப்புகள், மாநில நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்கள், மாநில மற்றும் மத்திய அரசின் திட்டங்கள், ஒப்பந்தப்புள்ளி நடைமுறை சட்ட விதிகள் மற்றும் பணிகள் செயல்படுத்துதல், கட்டிட வரைபட அனுமதி, மனைபிரிவு அங்கீகாரம் தொடர்பான விதிகள் மற்றும் நடைமுறைகள், நகராட்சி நிதி ஆதாரங்கள் மற்றும் கணக்கியல் நகராட்சி, வரவு செலவு திட்டங்கள், திட்டமிடல், மக்கள் தொடர்பு மற்றும் பொதுவான நடைமுறைகள் குறித்து பேரூராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

அதிகாரிகள்

பயிற்சி கூட்டத்தில் உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) குற்றாலிங்கம், மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் முகமது ஷெரிப், செயல் அதிகாரி (நிர்வாகம் -1) ராஜேஸ்வரன், மேற்பார்வையாளர் (மாவட்ட நகர்ப்புற ஊரமைப்பு திட்டம்) ஸ்ரீகுமார், உதவி இயக்குனர் (ஓய்வு) உள்ளாட்சி தணிக்கை முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story