பேரிடர் கால மீட்பு குறித்து 60 போலீசாருக்கு பயிற்சி


பேரிடர் கால மீட்பு குறித்து 60 போலீசாருக்கு பயிற்சி
x

பேரிடர் கால மீட்பு குறித்து 60 போலீசாருக்கு பயிற்சி

திருவாரூர்

பருவமழை காலங்களில் தீவிர மழை வெள்ளத்தால் பேரிடர் பாதிப்பு ஏற்படும் போது மக்களை பாதுகாத்து மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளித்திட திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டார். அதன்படி திருவாரூர் கமலாலய குளத்தில் போலீசாருக்கு பேரிடர் கால மீட்பு பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரமோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கிள்ளிவளவன், கோகிலா ஆகியோர் மேற்பார்வையில் 60 போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிப்பது, எவ்வாறு அவர்களை மீட்பது குறித்து செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து ரப்பர் படகுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


Next Story