வேளாண்மை அலுவலர்களுக்கு பயிற்சி


வேளாண்மை அலுவலர்களுக்கு பயிற்சி
x

வேளாண்மை அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது

தென்காசி

செங்கோட்டை:

தமிழ்நாடு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் சார்பில் வேளாண்மை அலுவலர்களுக்கு புத்தூட்ட பயிற்சி செங்கோட்டை நூலக கூட்டரங்கில் நடைபெற்றது. மண்டல இணை இயக்குனர் ஹரிஹரதாஸ் தலைமை தாங்கினார். செங்கோட்டை வட்டார புள்ளியியல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மாவட்ட துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் கனகம்மாள், தோட்டக்கலை உதவி இயக்குனர் செல்வ பிரபு, பிரவீன்குமார், செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் சிறப்புரையாற்றினர்.

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்ட திடல் அறுவடையின்போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய நடைமுறைகளை விளக்கி கூறப்பட்டது.

முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் கருப்பசாமி நன்றி கூறினார்.



Next Story