அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி
அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அரியலூர்
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றிய அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சைல்டுலைன் 1098 மூலம் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அனுப்பிரியா வரவேற்றார். இதில் திருமானூர் ஒன்றியத்தில் பணிபுரியும் 86 அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். குழந்தை திருமணம் மற்றும் பாலியல் துன்புறுத்தல், சைல்டு லைன் 1098 இலவச எண் ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டது. பாலியல் தொந்தரவு பற்றி ஜான்சிராணி கருத்துரை வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அறிவுரைகளையும், பயிற்சிகளையும் வழங்கினர். முடிவில் சைல்ட் லைன் பணியாளர் அனுசியா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story