சமையல் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி


சமையல் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி
x

சமையல் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை

அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக அரசின் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் சமையல் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமாவதி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி, துணை தலைவர் கல்யாணி மாரிமுத்து ஆகியோர் பயிற்சியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட மையங்களில் உள்ள சமையலர்கள், உதவியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.


Next Story