சமையல் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி
காலை உணவு தயார் செய்வது குறித்து சமையல் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
விழுப்புரம்
திண்டிவனம்:
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்திற்கான மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான சமையல் பொறுப்பாளர்களுக்கான சமையல் பயிற்சி முகாம் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் பாங்கை.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். இதில் மகளிர் குழு வட்டார இயக்க மேலாளர் ராஜலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் சித்ரா வேலாயுதம், மாவட்ட பிரதிநிதி ரவி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஜூலி, வேளாங்கண்ணி, சத்யா, நிர்மலா, வட்டார சமையல் பயிற்சியாளர்கள் தாட்சாயினி, வினோதினி, சிவகங்கை, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வட்டார மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் காலை உணவு என்னென்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story