மின்வாரிய ஊழியர்களுக்கு பயிற்சி
மின்வாரிய ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் தனியார் திருமண அரங்கில் மின்வாரிய ஊழியர்களுக்கான பாதுகாப்பு மற்றும் முதலுதவி சிகிச்சை பற்றிய பயிற்சி நடைபெற்றது. விருதுநகர் மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் (பொது) மாலதி தலைமையிலும், நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி முன்னிலையிலும் பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 150 மின்வாரிய ஊழியர்களுக்கு எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேஷ் பாபு முதலுதவி சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை குறித்து பயிற்சி அளித்தார். மின்வாரிய பாதுகாப்பு என்ஜினீயர் பேச்சி முத்து பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பயிற்சி அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை உதவி நிர்வாக என்ஜினீயர் பாபு செய்திருந்தார்.
Related Tags :
Next Story