செம்மை நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


செம்மை நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில செம்மை நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.

கடலூர்

கடலூர்,

நடுவீரப்பட்டு அருகே பாலூரில் உள்ள காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில் பரனாறு உபவடிகால் பகுதியில் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் செம்மை நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. இதற்கு ஆராய்ச்சி நிலையத்தின் தலைவரான பேராசிரியர் அனிசாராணி தலைமை தாங்கி நீர்வள, நில வள திட்டம் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து இணை பேராசிரியர் விஜயகீதா செம்மை நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறி பயிற்சி அளித்தார். இணை பேராசிரியர் ஜெயபிரபாவதி பூச்சி மற்றும் நோய் தாக்கம் குறித்து விளக்கி பேசினார். இதையடுத்து விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டது.


Next Story