இடுபொருட்கள் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
இடுபொருட்கள் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நீலகிரி
குன்னூர்,
குன்னூர் தோட்டக்கலைத்துறை அட்மா திட்டத்தின் கீழ் மேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தூதூர்மட்டம் கிராமத்தில் விவசாய சூழல் அமைப்பு பகுப்பாய்வு தொழில்நுட்பங்கள் குறித்து மேரக்காய் சாகுபடி செய்யும் இயற்கை விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி தொடங்கப்பட்டது. இதற்கு தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) ஷிபிலா மேரி தலைமை தாங்கினார். நேற்று இயற்கை சாகுபடி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. விவசாயிகள் சொந்தமாக உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் தயார் செய்வதற்கு செயல்விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் மண் பரிசோதனை செய்ய வேண்டியதன் அவசியம், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார். இதில் தோட்டக்கலை அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story